Saturday 23 February 2013

முதல் இரவில் நடுக்கம் சகஜம்தான்…


மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும். எனவேதான் திருவள்ளுவர் ‘மலரினும் மெல்லியது காமம்' என்று கூறியுள்ளார். வரட்டுத்தனமாகவோ, கடமைக்காக அல்லது பாலுணர்வை வெறித்தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போதுதான் அங்கே சிக்கல்கள் தொடங்குகின்றன.

இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவற்றிற்கு அடிப்படை காரணம் தாம்பத்ய உறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தான். இன்றைக்கு பாலுணர்வு தவறாக புரிந்து கொள்ளப்படுவதாலேயே பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட காரணமாகிறது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

பதற்றம் வேண்டாம்

தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காமத்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் தோன்றுகிறது . கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும்போது உறவில் சிக்கல் தோன்றுகிறது .மேலும் மேலும் தாம்பத்ய உறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலில் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். தேவையில்லாத பதற்றமும் அச்சமும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மை

திருமணமான நாளில் முதன் முதலாக தாம்பத்ய உறவு கொள்ளும்போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல் போக வாய்ப்பு உண்டாகிறது. இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம்பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . திருமணத்திற்கு முன்பு நண்பர்களின் தவறான அறிவுரை, சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதியில் எண்ணுகிறார்கள். இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது.அதேபோல் தவறான பெண்களிடம் பாலுறவு கொள்ளும்போது அவர்களின் தவறான வார்த்தை நடவடிக்கை களினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி இதுவே பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது .

திருமணத்திற்குமுன் பெண்கள் கொண்ட உறவு திருமணமான பின் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்திலும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்குகிறது . வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத்தை பெறவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். முதல்நாளில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே இதை எதிர்கொண்டு இனிமையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்க்கை என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Thanks:retham


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog