Thursday, 28 February 2013

ராஜபக்சேயின் போர் குற்றம். புதிய தீர்மானம்?

இலங்கை இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.

 இதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி 2-வதாக போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டது. அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.
இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
 இதையடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 இந்த தீர்மானத்தையும் அமெரிக்காவே கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் ஒரு வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன் 2 வீடியோ காட்சிகளையும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டிருப்பது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இதனை தயாரித்துள்ளது. தி லாஸ்ட் பேஸ் (இறுதிக் கட்டம்) என்ற தலைப்பில் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் சிங்கள ராணுவத்தின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய தமிழர்களின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன. ஜெனீவாவில் இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிய வீடியோ காட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.
 பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்கள் தமிழில் இருப்பதால் அவற்றுக்கு ஆங்கிலத்தில் சப்- டைட்டில் போடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கான தூதர் நவி பிள்ளை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இலங்கை போர்க்குற்ற மீறல்கள் என்ற தலைப்பில் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இது போன்ற அபாயகரமான குற்றங்களில் இருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று போர்க்குற்ற மீறல்களுக்கான ஆதாரங்களாக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட இருப்பதால் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளின் பார்வை திரும்பும். இதன் மூலம் இலங்கையின் முகமூடி கிழித்து எறியப்படும். அதற்கு எதிரான பிடி மேலும் இறுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை லண்டனில் நேற்று வெளியிட்டது. மனித உரிமை அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் இதை வெளியிட்டுள்ளார். 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரால் பாதிக் கப்பட்ட 75 பேரின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் அனைவரும் இலங்கையில் அதிகாரபூர்வ மற்றும் ரகசிய விசாரணை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள். அங்கு இவர்கள் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார்கள்.
ராணுவம் மற்றும் போலீசாரால் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். தாங்கள் பட்ட இன்னல்களை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் இலங்கை ராணுவம் கொடு மைப்படுத்தி உள்ளது. வீடுகளில் இருக்கும் ஆண்கள், பெண்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி கடத்திச் சென்று முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
சிறுவன் பாலச்சந்திரனைகொன்று

விடக்கூ றியதெ இனத்துரோகி கருணாதானாம். 
அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்க அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சரி பார்த்து உறுதி செய்து இருக்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் அவர்களை இங்கிலாந்து அரசு இலங்கைக்கு  திருப்பி அனுப்பி வருகிறது. அவ்வாறு இலங்கை திரும்பிய பின்புஅவர்களை  சிங்கள ராணுவம் , போலீசார்  சித்ரவதைகள் செய்வ தாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இங்கிலாந்து இயக்குனர் டேவிட் மேபம் கூறுகையில், இங்கிலாந்து அரசு இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கையில் மாற்றம் செய்து அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
மாவீரன் பிரபாகரன் தமிழீழம் எனக் காட்டும் இடங்கள்தான் இன்று தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட இடங்களாக மாறிய சோகம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணக்கிட கைவிரல்கள் ....,

என்னடா கொஞ்ச நாட்களாக காணோமே என்று சிலர் இதை எ திர்பார்த்துக்கொண்டிருக்கலாம்.
அவர்களை முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றவில்லை.இதோ அடுத்த அமைச்சரவை மாற்றம்.
இம்முறை பதவி இழந்தோர் விவரம்:
பதவி இழந்துள்ள கோகுல இந்திரா சென்னை அண்ணாநகரிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். இவர் சுற்றுலாத்துறையை கவனித்து வந்தார்.
என்.ஆர்.சிவபதி பள்ளிக்கல்வி சட்டம் உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தவர் ஆவார். இவர் முசிறி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.
வேலூர் தொகுதியில் போட்டியிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆனவர் டாக்டர்.விஜய் ஆவார்.
மணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ டி.பி.பூனாட்சி,
அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ வைகைச்செல்வன்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணிஆகிய மூன்று பேர்கள் நாளை  அமைச்சர்களாக  பணியேற்க மன்னிக்கவும் பதவியேற்க உள்ளனர்.
காதி மற்றும் ஊரக தொழில்துறைக்கு  அமைச்சராக பூனாட்சி , பள்ளிக்கல்வித்துறைக்கு  அமைச்சராக டாக்டர் வைகை செல்வன், சுகாதாரத்துறைக்கு  அமைச்சராக கே.சி.வீரமணி   ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது எத்தனையாவது மாற்றம் என்று கணக்கிட்டுக்கொண்டிருக்காமல் இப்படி அடிக்கடி மாற்றங்கள் செய்வது தேவையா?என்றுதான் பார்க்க வேண்டும்.கணக்கிட கைவிரல்கள் பத்தாது.
 ஒரு துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் பதவி நாற்காலியில் அமர்ந்து துறை தொடர்பாக விடயங்களை தெரிந்து செயல்படும் முன்னரே அவர் மாற்றப்படுவது போல் மாற்றங்கள் அடிக்கடி நடக்கிறது.
பதவி வழங்கும் முன்னரே அவரின் தகுதி,திறமை,நாணயம் பற்றி நன்கு அறிந்துதானே நாற்காலி கொடுக்கப்படுகிறது.பின் திடீர் மாற்றங்கள் ஏன்?
இது அவர்களின் மனதில் இன்னும் எத்தனை நாட்களோ ?அதற்குள் துறை மூலம் சம்பாதிக்க வேண்டியதை சம்பாதித்துக்கொள்வோம் .செய்ய வேண்டியவற்றை செய்து கொள்வோம் என்ற சிந்தனைதான் ஓடும்.மக்கள் நலன்,துறைவாரி நலன் பற்றி சிந்திக்க யாருக்கு மனநிலை இருக்கும்.?
ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது.இந்த ஆட்சி முடியும் போது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் யாரும் இருக்க மாட்டார்கள்.
அனைவரும் முன்னாள் அதிமுக  அமைச்சர்களாகத்தான் இருப்பார்கள்.!
இப்போது கோட்டைக்கு சென்று அரசு தலைமைச்செயலரை துறைவாரியாக அமைச்சர்கள் பெயரை கேட்டால் உடனே சொல்லிவிடமுடியுமா என்ன?
அவரை ஏன் கேட்க வேண்டும் .சக அமைச்சர்களையே கேட்போமே.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog