Saturday, 16 February 2013

திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கீங்களா?


இந்த உலகில் அனைத்து உறவுகளும் முதலில் நட்பிலேயே தொடங்கும். ஏனெனில் நட்புக்கு எந்த ஒரு முடிவும் இல்லை. உதாரணமாக, ஒரு ஆண் மற்றும் பெண் உறவை எடுத்துக் கொள்வோம். அதில் ஆணும் பெண்ணும் முதலில் சாதரணமாக பேசவார்கள், பின்பு அது நட்பாக மாறும், அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறும். இறுதியில் அது திருமணத்தில் முடியும். ஆனால் இவ்வாறு நட்புறவில் இருந்தவர்களுக்குத் திருமணம் ஆன பின்பும் அந்த நட்புறவு இருக்கிறதா? என்று கேட்டால், அது மிகவும் அதிசயம் தான். ஆனால் திருமணம் ஆன தொடக்கத்தில் நட்பானது இருக்கும். அதுவே சில நாட்கள் கழித்து, அதிக குடும்ப சுமையின் காரணமாக சிலருக்கு அந்த நட்புறவானது சில சமயங்களில் போய்விடும். அதனால் குடும்பத்தில் பல சண்டைகள் வரக்கூடும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் எப்படியெல்லாம் இருந்தால் நண்பர்களாக இருக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
வாழ்க்கைத்துணையிடம் கண்டிப்போடு இருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும். சாதாரணமாக கணவன் மனைவி என்றால் அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று கேள்வி போல் கேள்வி கேட்டு நச்சரிப்பார்கள். அப்படி இருந்தால் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது. ஆகவே அவர்கள் நண்பர்களாக இருக்க முதலில் அவர்கள் கணவன் மற்றும் மனைவி என்று உருவாக்கப்பட்டதை மனதளவில் மறக்க வேண்டும். அதனை மறந்து வாழ்க்கையை நடத்தினால், குடும்ப வாழ்க்கை நன்றாக, ஒரு நட்புறவோடு இருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை நினைத்து தேவையில்லாமல் டென்சன் ஆவார்கள். அதிலும் அவர்கள் சம்பளம் குறைவாக உள்ளதோல் வேலையை மாற்றலாமா என்பதைப் பற்றி, வீட்டு வாடகையைப் பற்றி மற்றும் பணத்தை சேமிப்பது பற்றி வாழ்க்கைத் துணையிடம் ஆலோசனை செய்யும் போது எப்போதும் டென்சனோடு இருப்பார்கள். ஆனால் அதையே நண்பர்களிடம் சொல்லும் போது எப்படி கிண்டலோடு, சந்தோஷமாக பேசி பகிர்ந்து கொள்வோம். ஆகவே இதே போல் தன் வாழ்க்கைத்துணையையும் நினைத்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
எதையும் அதிகமாக எதிர் பார்க்காமல் இருக்க வேண்டும். அதற்காக எல்லா விஷயங்களிலும் அப்படி இருக்க சொல்லவில்லை, ஒரு சில விஷயங்களுக்கே. உதாரணமாக, வெளியே செல்ல வேண்டும் என்று கூப்பிடும் போது கொஞ்சம் வேலை இருக்கிறது என்று கூறினால், சரி என்று அதனை பெரியதாக எண்ணக் கூடாது. அவ்வாறு செய்யாமல் வந்தாக வேண்டும் என்று கூறி அவர்களை கோபப்படுத்தினால், தேவையில்லாத சண்டைகள் தான் வரும். ஆகவே அதனை தவிர்க்க வேண்டும். அதுவே ஒரு நண்பர்களுக்கு அடையாளம்.
திருமணத்திற்குப் பிறகு அனைத்து செயல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது படுக்கை அறையானாலும் சரி, சமையலறையானாலும் சரி, எதுவானாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்படி ஹாஸ்டலில் தங்கும் போது நண்பர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோமோ, அதேப்போல் ஒரு ரூம் மேட் போல் நடந்து கொள்ள வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் நடந்து கொண்டால், உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு ஒரு நல்ல உயிர் நண்பர்களாக இருப்பார்கள். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
Thanks:retham


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog