திருமணமாகி புகுந்த வீடு போகும் பெண்ணுக்கு பலரும் பலவிதமாக அறிவுரை செய்து அனுப்புவார்கள். அதெல்லாம் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் காதில் போட்டுக்கொண்டுதான் அவர்கள் புகுந்த வீட்டிற்குள் நுழைவார்கள். புதுப்பெண்ணிற்கு முதல் அறிமுகம் கணவர்தான் அவரது இதயத்தை கவர சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் அனுபவசாலிகள் அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
அன்போட அணுசரனையும் அவசியம்
கணவன் மனைவி இடையேயான உறவுக்குள் யாரும் நுழைய அனுமதிக்கக் கூடாது. அந்த அளவிற்கு கணவரை புரிந்து சின்னச் சின்னச் தேவைகளைக் கூட நிறைவேற்றினால் கணவர் குளிர்ந்து போவார்.
இறுக்கமா கட்டிப்பிடிங்க படுக்கை அறையில் மட்டும்தான் கணவருடன் ஊடல் செய்யவேண்டும் என்றில்லை. ஆளில்லாத நேரத்தில் சமையல் அறையோ, பாத்ரூமோ எங்காவது தனியாக சந்திக்க நேரிட்டால் சின்னதாய் ரொமான்ஸ் செய்யுங்களேன். இறுக்கமாய் கட்டிப்பிடித்து காதோரம் கிசுகிசுப்பாய் ஐ லவ் யூ சொல்லுங்கள். சொக்கிப்போவார் உங்கள் கணவர்.
படுக்கை அறையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நிறைய அறிவுரை கொடுத்துதான் அனுப்புவார்கள். அதிகமாக வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காமல் கொஞ்சம் அவருக்கு ஃபேவரைட் பொசிசனுக்கு ஒத்துழைப்பு கொடுங்களேன். இதன் மூலம் கணவரின் மனதில் எளிதில் இடம் பிடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
உடையில் கொஞ்சம் தாராளம்
எப்பொழுது பார்த்தாலும் இழுத்துப் போர்த்திய புடவையில் வலம் வரும் நீங்கள் கணவருடன் தனித்திருக்கும் நேரத்திலாவது கொஞ்சம் தாராளமாக இருங்களேன். கணவரின் முன்னிலையில் உடைமாற்றுவது, படுக்கை அறையில் உள்ளாடை தெரியுமாறு பளிச் நைட்டி அணிவது போன்றவை கணவரின் மனதை கவருமாம்.
படுக்கை அறை எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்தால் போரடிக்கும். எனவே அவ்வப்போது சின்னச் சின்ன மாற்றங்களை செய்யுங்கள். படுக்கையில் சில அலங்காரங்கள். மனம் மயக்கும் ரூம் ப்ரெஸ்னர் போன்றவைகள் கணவருக்கு பிடித்தமானதாக இருந்தால் அப்படியே மயங்கிப் போவார் உங்களவர்.
அவருக்கு என்ன பிடிக்கும்?
கணவருக்குப் பிடித்த மாதிரியான சுவையில் சமையல் செய்து கொடுத்தால் போதும் அப்புறம் வேறு எந்த சுவையையும் அவர் விரும்பமாட்டார். அதேபோலத்தான் படுக்கை அறையிலும் சில விசயங்கள் கணவருக்கு பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் நீங்கள்தான் அவரின் இதயம் கவர்ந்த ராணி என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன கணவரின் இதயத்தைக் கவர நிபுணர்கள் கூறியதை பின்பற்றுங்களேன்.
Thanks:retham
Related Article: