Thursday, 28 March 2013

[NUDPAM -GB] தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு [ICT Talks Session] April 6th @Veerasingam Hall Jaffna


நண்பர்களே 

நுட்பம் அமையம் கடந்த மார்ச் 9 இல் நடாத்திய மாநாட்டினை தொடர்ந்து மற்றுமொரு கருத்தமர்வு ஒன்றினை ICTA நிறுவனம், எமது அமையத்துடன் இணைந்து நடாத்த உள்ளது. இவ்வாறான தொடர் நிகழ்வுகள் எமது பிரதேசத்தின் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. வெறுமனே பயிற்சிக்கருத்தரங்குகளாக இல்லாமல் சர்வதேச மட்டத்தில் நடைபெறும் சிறப்பு அனுபவ கருத்தமர்வுகள் ஆகவும் புதிய நுட்பங்கள் நுணுக்கங்களை  துறைசார்ந்த வல்லுனர்களின் அனுபவப்பகிர்வுகளில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு வழிசமைப்பதற்காகவும் புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னிறுத்துவதற்காகவும் நமது தாய்மொழியில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் ஒரு முன்னுதாரணமாக நுட்பம் அமையம் திகழ உள்ளதை கடந்த மாநாட்டில் இருந்து நீங்கள் அறியத்தொடங்கியிருப்பீர்கள்

இந்த முன்னுதாரணத்தினை இனிவரும் காலங்களில் பலரும் பின்பற்ற வழிசமைத்திருக்கின்றோம். உலகளாவிய ரீதியில் நடைபெறும் 
TED Talks , IIT Talks , MIT Talks என்பன தொழில்நுட்ப வல்லுனர்களை, நிறுவனங்களின் தலைவர்களை உருவாக்கியதுபோல நமது நுட்பம் அமையத்தின் இந்த தொடர் கருத்தமர்வுகளும் இன்னும் புதிய வல்லுனர்களை நமது சமுதாயத்தில் உருவாக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது .இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழிருந்து  இலங்கையின் தகவல்தொழில்நுட்ப விடயங்களை கையாளும் அரச நிறுவனமான  ICTA அமைப்பு எமது அமையத்துடன் இணைந்து நிகழ்வு ஒன்றை நடாத்த முன்வந்திருக்கிறது . நீங்கள் சார்ந்த நிறுவனங்களில் இதனை தெரியப்படுத்தி சகல ஆர்வலர்களையும் நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நுட்பம் அமையம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.நிகழ்வு தொடர்பிலான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

தவா
செயலர்
நுட்பம் -இலங்கை


தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு [ICT Talks Session]

ICTA Srilanka நிறுவனம் நுட்பம் -இலங்கை தமிழ் தகவல் தொழிநுட்ப அமையத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள மேற்படி நிகழ்வு வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் திகதி சனிக்கிழமை மு.ப 10 மணி முதல் பி.ப 1 மணிவரை யாழ்ப்பாணத்தில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வானது அடுத்த நாள் பிள்ளையார் சுற்றுலா விடுதியில் நடைபெறவுள்ள தகவல்தொலில்நுட்பத்துறை நிறுவனங்களின் கண்காட்சி நிகழ்வின் முன்னோடி நிகழ்வாகும் . இந்நிகழ்வுக்கான உள்நுழைவு அனுமதி இலவசம். இங்கு பதிவு செய்வதன் மூலம் உங்கள் வருகையினை உறுதி செய்து கொள்ளுங்கள்


தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆரம்பத்தில் இருந்து முன்னேறி ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனமான Zillione (zillione.com) நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ளவரும் இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ள தமிழர் ஒருவரின் அனுபவப்பகிர்வினை அறிந்து கொள்ளவும்.அப்படி நமது நமது பிரதேசத்தில் இன்னும் இளைய தலைமுறையில் இருந்து புதியவர்கள் உருவாகுவதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளவும் இக்கருத்துரைகள் உதவிசெய்யும்.புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைஆரம்பிக்க விரும்பும் இளைய தலைமுறைக்கு இது ஆலோசனைக்களமாகவும் அமைந்திருக்கும்

அதேவேளை தகவல் தொடர்பாடல் தொழிற்துறையின் தற்போதைய நிலையினையும் தொழில் நுணுக்கங்களையும் உலகளாவிய ரீதியில் இந்த தொழிற்துறையில் உள்ள வாய்ப்புக்களையும் போட்டித்தன்மைகள் பற்றியும் அவற்றினை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியும்

தற்போது தகவல்தொழில்நுட்பத்துறையில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களும் தகவல் தொழில்நுட்ப தொழிற்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழில் முயற்சியாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களையும் இக்கருத்துரைகள் வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆர்வலர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையினை தமது இலக்காக கொண்டுள்ள அனைவரும் அணி திரண்டு வந்து பயன் பெறுமாறு நுட்பம் அமையம் மற்றும் ICTA Srilanka ஆகிய அமைப்புக்கள் கேட்டுக்கொள்கின்றன.



Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog