தனது கலைக்களஞ்சியங்கள் பக்கத்திலுள்ள மதுரைத் திட்டம், நூலகம் திட்டம் போன்ற தளங்களில் நூல்களைப் பதிவிறக்கி Box.Com, Mega.Co.Nz போன்ற இணையச் சேமிப்பகங்களில் பதிவேற்றியுள்ளார். இது தான் அவரது மின்நூல் களஞ்சியம். இதனைவிட யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு?
நீங்க படித்தவங்க… உங்களை எதிர்க்க என்னிடம் போதிய அறிவு இருக்கவேணுமே! என்றாலும் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அது உங்கள் "யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு?" என்ற கேள்விக்குப் பதிலாக அமையுமென நம்புகிறேன்.
இரண்டல்ல… இருபதிற்கு மேற்பட்ட தளங்களில் இருந்து நான் விரும்பிய நூல்களைப் பதிவிறக்கினேன். பல இணையப் பக்கக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியும் இணைத்துள்ளேன். என்னிடம் உள்ள நூலைக்கூட ஒளிப்படமாக்கி (Scan செய்து) நூலாக்கியும் இணைத்துள்ளேன். சில சிறு நூல்களை இணைத்துத் தனி நூலாக்கியும் இணைத்துள்ளேன்.
Yarlpavanan
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment