Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Thursday, 27 December 2012

உலகத்தமிழ் இணைய மாநாடு



suran

செல்பேசிகள், Tablet Computers எனப்படும் பலகைக் கணினிகள், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்கு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல் குறித்து விவாதிப்பதற்கான உலகத்தமிழ் இணைய மாநாடு சிதம்பரத்தில் வரும்  28 -ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்கள்  நடக் கிறது.

உத்தமம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற சர்வதேச அமைப்பும், தமிழ்நாட்டின் அண்ணாமலைப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பதினோறாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் மொழியியலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
Continue reading →

Tuesday, 16 October 2012

Thoughts on Airtel Super Singer Junior (SSJ3) Finals


நான் சிறுவனாக வளர்ந்த ஊரில் கோரக்கன் கோயில் என்றொன்றுண்டு. ஆசையாக வளர்த்த கடாவை அங்கு கொண்டு வந்து கோரக்க சித்தருக்கு காணிக்கையாக வெட்டுவார்கள். பார்க்க பரிதாபமாக இருக்கும். ஏனோ, இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 குழந்தைகளைப் பார்க்கும் போது இது நினைவிற்கு வருகிறது. பாருங்களேன், பிரகதி, சுகன்யா இருவரும் முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர்கள். சுருதி சுத்தமாகப் பாடக்கூடியவர்கள். ஆனால் நேற்று சென்னையின் ஏதோவொரு மாலில் கட்டுக்கடங்காத ஒரு கூட்டத்தின் முன்னிலையில், ‘பாடு’ என்று சொன்னபோது, இத்தனை நாள் கற்ற வித்தையும் காற்றில் பஞ்சாய் பறக்க. ஒருவருக்கு மேல் ஒருவர் என்று இத்தனை நாள் மெருகேற்றி வந்த இசை, ‘இவளுக்கு நான் என்ன குறைச்சல்’ எனும்படி படுமோசமாகப் போனது. நேற்றுப்பாடிய ஐவரில், யாழினி மட்டும்தான் ஏதோ சுமாராகப்பாடினார். ஏன் இந்த பலிகடா விளையாட்டு? பாவம்! இவர்கள் ஒரு contained environmentல் தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்து கற்றுத்தேறி, தேர்ந்த மூன்று நடுவர்களின் கூர்மையான பார்வையிலும், ஒரு தேர்ந்த குரல் விற்பன்னரின் கண்காணிப்பிலும் பாட்டுப்பாடி திறமை வளர்த்துவிட்டு, இவையெல்லாம் எதற்கு என்றால், இசை ஞானம் அதிகமற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இராகம், பேதமற்ற வெறும் ‘குத்துப்பாட்டு’ பாடத்தான் என்றால், something is terribly wrong! என்று எண்ணத்தோன்றுகிறது. சென்ற பருவத்திலும் இப்படித்தான் சத்ய பிரகாஷ், பூஜா, சந்தோஷ், ஸ்ரீநிவாஸ் இவர்களெல்லாம் படிப்படியாய் முன்னேறி வந்த பின் திடீரென்று பொதுமக்களின் ஓட்டுக்கு மன்றாடு என்று force செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. They miserably failed! 

Continue reading →

Wednesday, 3 October 2012

தென் தமிழின் பத்துக்களைகள்: 8


கட்டளை 8

அன்னையிட்ட சோறு ருசியில் குறையில்லாமல் இருப்பது போல் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் தந்து அதன் மேலும் நம்மை வெள்ளுயிர் (சுத்த ஆத்மா) ஆக்கி தளிர்ப்பிக்கும் இறைவனை வாழ்க, வாழ்கவென்க! 


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே




நல்லுயிர் வாழ தாரகம் (அன்னம்), போஷகம் (நெய், பால்), போக்யம் (சந்தனம், புஷ்பம்) இவை தேவை. இதுவே பலர் வேண்டும் வரமாகவும் உள்ளது. இது அருளப்பெற்றால் போதுமென்றே பலர் சொல்லக்கூடும். அத்தகையோர் ஆசைக்கேற்ப அனைத்தும் வழங்கியும் நில்லாது அதற்கும் மேலாக எமது ஆன்ம சொரூபத்தைக் காட்டி தொண்டூழியம் செய்யும் படி ஆட்செய்த கருடக்கொடியோனுக்கு பல்லாண்டு கூறுமினே!

மிகப்பொருள்ள ஒரு கட்டளை. இறைவனை ஏன் வணங்க வேண்டும்? எனும் கேள்விக்கு இங்கே பதிலுள்ளது. நாம் பிறக்கும் போது கையில் ஏதும் கொண்டு வருவதில்லை. எல்லாமும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு என்பது ஒரு விருந்து. போகிக்க வேண்டிய அனைத்தும் முன்னமே படைக்கப்பட்டுள்ளது. நாம் வந்து, பிறந்து, வளர்ந்து, போகிக்க வேண்டியதுதான். அதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டு, ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலமென’ வாழ்கிறோம். ஆயினும் நம்மில் சிலருக்கு இந்த பிறப்பின் ரகசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது? எதற்காக இந்தப் படைப்பு? நான் யார்? நான் இவ்வுலகிற்கு வருமுன்னர் எங்கிருந்தேன்? ஏன் இவையெல்லாம் எனக்கு முன்னமே வழங்கப்படுள்ளன? இதன் பொருளென்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. ‘இந்த வேட்கையை’ எழுவிப்பவனும் இறைவனே! இந்த வேட்கை வளர, வளர நமது உண்மையான
ஆத்ம சொரூபம் விளங்கப்பெறுகிறது.

உலகம் ருசிக்கிறது! உண்ணும் சோறு ருசிக்கிறது. பருகும் நீர் (பால், தயிர் இத்யாதி) இனிக்கிறது, தின்னும் வெற்றிலை (போகப்பொருள்கள்) ருசிக்கிறது. ஏன் இவை தரவேண்டும்? ஒரு தாய் தன் பிள்ளைக்கு ருசியாகச் சோறு போட எக்காரணமும் தேவையில்லை. அவள் தாயுள்ளம் அதை விரும்புகிறது. நன்றாக குண்டு, குண்டாக பிள்ளை இருந்தாலும், ‘ஐயோ! பாவம்! குழந்தை இளைத்துவிட்டது! என்று இன்னொரு கை சோறு போடுவாள். அது போல தாயிற் சிறந்த தயாபரனான இறைவன் நமக்கு எல்லாம் வழங்கி அழகு பார்க்கிறான். குழந்தைக்கு கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் வைத்துப்பார்ப்பதில்தான் எத்தனை இன்பம்! இல்லையா? ஆடி வரும் தேர் இல்லையா குழந்தைகள்! இறைவனின் குழந்தைகள் நாம். எல்லாம் அனுபவித்து வளர்ந்து வரும் நாம், ஒரு நாள் நன்றிக்கடன் படுகிறோம். திடீரென்று உதிக்கிறது! எதற்காக பெற்றோர் நம்மை ‘இப்படி’ கவனித்துக்கொள்கின்றனர்? குறிப்பாக தாயின் அன்பிற்குக்காரணமென்ன? எனும் கேள்வி.

அப்போதுதான் இறைவனுக்கும் நமக்கும் ஒழிக்க, ஒழிக்க ஒழியாத உறவு புலப்படுகிறது.

பொதுவாக குணங்கள் மூன்று ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன அவை. விஷ்ணு ஸத்வ குணம். பிரம்மா ரஜோ குணம். சிவன் தமோ குணம். பிரபஞ்ச பரிபாலணத்திற்காக பரம் இத்தகையக குணங்களை தன் மேல் ஏற்றிக்கொண்டு செயல்படுகிறது. இக்குணங்கள் ஆன்மாவிற்குமுண்டு. பகவான் ஸத்வ குணனாக இருக்கிறான். அதுவே உள்ளதில் சிறந்த குணம். அதைப்பெற துடிக்கும் அடியான், ‘பாகவதன்’ என்று அழைக்கப்படுகிறான். இறைவனுடைய ஸத்வ குணம் முழுமையாகப் பெற வேண்டும் என்பதே பாகவதனின் அவா.   ஸத்வகுணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும், ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும், தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிமரபு. அதற்கிணங்க ஸ்த்வ குணசீலனாக எம்மை மாற்றிவிடும் போது நம்முயிர், ‘வெள்ளுயிர்’ ஆகிவிடுகிறது. அதாவது, சுத்தஸ்வரூபராக ஆக்கினான் நம்மை என்று காண்க!

இப்படி ஆக்கியவன் எப்படிப்பட்டவன்? பை நாகப் பாம்பில் சயனித்து இருப்பவன். அந்த நாகத்திற்கு ஜென்மப்பகைவனான கருடனைக் கொடியாக, வாகனமாகக் கொண்டவன்! அதாவது நட்பு, பகைமை என்பது போன்ற துருவங்கள் அவனை ஒன்றும் செய்யாது. அக்குணங்களுக்கும் அடைக்கலமாக உள்ளவன் அவன். எனவேதான் அவன் ‘நிர்குணன்’.

நமக்கு நல்லதோர் வாழ்வளித்து, மேலும் நமது உண்மையான ஆன்ம சொரூபத்தையும் துலங்கச் செய்யும் வள்ளலுக்கு பல்லாண்டு கூறுவது நமது
கடமை என்று காண்க!


Continue reading →

Monday, 1 October 2012

தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 6


கட்டளை 6

வாழையடி வாழையாக எந்தை, தந்தைதம் மூத்தப்பன் என்று இம்மண்ணின் வளத்துடன் உருவாக்கித்தந்திருக்கும் இறைப்பொருளை இறைஞ்சுதலே எம் தலையாய கடமை!


எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே



மரபு என்பது மண் சார்ந்தது. எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடு! அதனாலேயே அது வந்தனைக்குரியது. காலம், காலமாக, தலைமுறை, தலைமுறையாக சித்தாங்களை வளர்த்தெடுத்து, சீர் செய்து, நெறிப்படுத்தி நம் கையில் கொடுத்துள்ளனர். அதை வந்தனை செய்து, மகிழ்ந்து, ஏற்று, வணங்கி உய்வுறுதல் எளிது. அதனை விடுத்து புதிய சித்தாங்களை ஏற்று, அவதியுற்று, அல்லல்பட வேண்டாமென முன்னைய கட்டளையில் சூசகமாச் சொன்னார்.

அது மட்டுமில்லை, இறைவனே காலத்திற்கு ஏற்ற வடிவில் தக்க தன்மையுடன் வந்து அருளுகிறான் என்பதைக் குறிக்க நரசிம்ம அவதாரத்தை முன்மொழிகிறார். ’குழந்தை’ பிரகலாதன் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று கூற. “இங்கு இருப்பானா?” எனக் கேள்வி கேட்காமல், “இங்கு இல்லையெனில்” உன்னைக் கொல்வேன் என்று கூறும் அளவிற்கு எதிர்மறை உள்ளம் கொண்ட இரணியன் போன்ற கொடிய அரக்கரைக் கொல்ல மிகக்குரூரமான நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தவன் இறைவன். பக்தனின் பலம், எதிரியின் பலம், காலத்தின் தேவை இவையெல்லாம் கணக்கில் கொண்டு அவதாரம் நடக்கிறது. தேவ தேவர்களெல்லாம் நரசிம்மரின் உக்கிரத்தைக் கண்டு நடு, நடுங்கி பதைக்கும் போது ‘குழந்தை’ பிரகலாதன், இக்கொடூர ரூபத்திலும் உறைபவன் நாரணனே எனக் கண்டான் எனச் சொல்லும் விதமாக ‘திருவோண நட்சத்திரத்தை’ நினைவுறுத்துகிறார் பட்டர்பிரான். இத்தகைய பல்வேறு அவதாரங்கள் தோன்றிய பூமி, இங்கு வழி, வழியாக நாம் ஹரியின் புகழ் பாடி உய்வுற்று வளர்ந்து வந்தோம். எனவே அந்த அழகிய மரபிற்கு ஓர் பல்லாண்டு என்று மங்களாசாசனம் செய்கிறார் பட்டர்பிரான். இப்படி மரபைப் பேண வேண்டும் என்று கட்டளை போடுவதால்தான் அவர் பெரியாழ்வார்! 

நம் பெருமிதங்கள் அறிந்து சிறப்புற வாழ வாழ்த்துக்கிறார் எம் ஆழ்வார்கோன்!
Continue reading →

Wednesday, 26 September 2012

தென் தமிழின் 10 கட்டளைகள்!

நண்பர்களே கூகிள்சிறியில் இணைக்கப்பட்ட 3400 ஆவது பதிவு இது!
பெரியாழ்வாரின் பல்லாண்டு, பல்லாண்டு பாசுரங்களைக் கேட்டவுடன் எனக்கேனோ Decalogue அல்லது Ten Commandments நினைவிற்கு வந்தது. பெரியாழ்வார் தமிழ் இறைமையின் 10 கட்டளைகளை முன்வைக்கிறார். அவரது பல்லாண்டு, பல்லாண்டு எனும் 10 பாசுரங்களை ஏன் முதலில் சொல்ல வேண்டும் என்று வைத்தனர் என யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும். அதில் மிகத்தெளிவாக பாகவத இலட்சணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இறைமையை நோக்கிய நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பட்டயம் போட்டு எழுதி வைத்துவிட்டார் பட்டர்பிரான். 10 பாசுரங்களிலும் தெளிவாய் சில கட்டளைகள் / அணுகுமுறை சொல்லப்படுகிறது.

Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog