காரைக்கால், மே.5 சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அரசலாற்ரங்கரையில் புதிய நிரந்தரதடுப்பு சுவரை கட்டவேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரைக்காலின் பிரதான சாலையான காமராஜர் சாலையில் இருந்து, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஒரே நேர்கோட்டில் செல்லும் அரசலாற்றை ஒட்டி கடற்கரைசாலை உள்ளது. காரைக்காலுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், ரயில் பயணிகள், ரேடார் நிலையம், கஸ்டமஸ், கடலோர காவல்நிலையம், மீன்வளத்துறை, சீகல்ஸ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த சாலை அதி முக்கியம் வாய்ந்தாக உள்ளது.
பிரஞ்சு காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சாலையானது ஒரே நேர்கோட்டில் இருப்பதால், சாலையில் செல்வோர் தவறி ஆற்றில் விழுந்திடாமல் இருக்க, ஆற்றுக்கும் சாலைக்கும் நடுவே கரையையொட்டி கைபிடி சுவர் அமைக்கப்பட்டது. கைபிடி சுவர் அமைத்து பல ஆண்டுகள் ஆகியதாலும், மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு முன் மீனவர்கள் விசை மற்றும் பைபர் படகுகளை இந்த கைபிடி சுவரில் கட்டியதாலும், சுவர் பலவீனமானது. இதன் காரணமாக கடற்கரை சாலையின் பல இடங்களில் கைபிடி சுவர் இடிந்து, கால்நடைகளும், வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும், ஆற்றில் தவறி விழுந்து இறந்து வந்தனர்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் பிராங்ளின் இடிந்த தடுப்பு சுவர்களை ஆய்வு செய்து மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில், இடிந்த பகுதிகளில் தற்காலிகமாக சவுக்கு மரங்களால் ஆன தடுப்பு சுவரை அமைத்தார். மேலும், நிரந்தர தடுப்பு சுவர் அமைக்க திட்ட மதிப்பீட்டை தயார் செய்யும்படி மாவட்ட பொதுப்பபணித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், கிட்டத்தட்ட ஒராண்டு ஆகியும், சவுக்கு மர தடுப்பு மட்டுமே நீடித்து வருகிறது, நிரந்தர தடுப்பு சுவர் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், மீண்டும் கால்நடைகளும், வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும், ஆற்றில் தவறி விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் டாக்டர் அனந்தகுமார் கூறியதாவது: ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி வருவதால், தடுப்பு சுவர் அதி முக்கியமானதாக உள்ளது. முக்கியமாக கடற்கரை சாலை-விக்ரம் சாராபாய் சாலை சந்திப்பில் வேகமாக வாகனம் ஓட்டி வருவோர் அரசலாற்றங்கரையில் தடுப்பு சுவர் இல்லாமல் மிகவும் தடுமாறி விடுகின்றனர். பலர் ஆற்றிலும் விழுந்து வருகின்றனர். கடற்கரை சாலையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டதன் காரணமாக, அரசு விருந்தினர் மாளிகை எதிரே சுத்தமாக தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. பெரும் விபத்து நடப்பதற்கு முன், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் மாவட்ட நிர்வாகம் முதல் கட்டமாக பைபர் படகு மீனவர்களை தடுப்பு சுவரில் இனி படகுகளை கட்ட தடை விதித்து, புதிய நிரந்தர தடுப்பு சுவரை கட்ட முன்வரவேண்டும் என்றார்.

Related Article: