Sunday, 30 December 2012

டாப் – 10’ Dualsim ஸ்மார்ட் போன்கள் பாகம் - 1

ஒரு மொபைலில் ஒரு சிம்கார்டு வைத்து பேசுவது போய் இப்போது 10 பேர்களில் குறைந்தது 7 பேர்களாவது இரண்டு சிம்கார்டுகள் வசதியுள்ள மொபைல்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அதனாலோ என்னவோ சமீபகாலமாக டூயல் சிம் மொபைல்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிலும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் கூட இப்போது இரண்டு சிம்கார்டுகளை ஆதரிக்கக்கூடிய வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு டாப் 10 டூயல்சிம் மொபைல்களை குறித்தான தகவல்களை இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
ஹெ.டி.சி Desire SV – 21,900/- ரூபாய்
HTC Desire SV 1
தைவானைச் சேர்ந்த ஹெ.டி.சி நிறுவனத்தின் உயர்ரக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன். ஆன்ட்ராய்டு லேட்டஸ்ட் வெர்ஷனான 4.0 இயங்குதளத்துடன் வருகிறது. டூயல்கோர் ப்ராசஸர், 4.3” இன்ச் கெப்பாசிட்டீவ் ஸ்க்ரீன், 8மெகா பிக்சல் கேமரா என எல்லா வசதிகளும் உள்ளது. ஆனால் வீடியோ காலிங் செய்வதற்கு முன்பக்க கேமரா மட்டும் கிடையாது. ஹெ.டி.சியின் ஸ்பெஷல் ஆடியோ குவாலிட்டியான beat audio வும் இதில் உண்டு.
சாம்சங் கேலக்ஸி S Duos – 16399/- ரூபாய்
Samsung Galaxy S Duos 1
மொபைல் சந்தையில் கொடிகட்டிப்பறக்கும் சாம்சங் நிறுவனத்தின் டூயல்சிம் மொபைல். 4”இன்ச் கெப்பாசிட்டீவ் ஸ்க்ரீன், 1ஜிஹெச் சிங்கிள் கோர் ப்ராசஸர், ஆன்ட்ராய்டு4.1 ஜெல்லிபீன் அப்டேட் வசதி, 5 மெகாபிக்சல் கேமரா, வீடியோ காலிங் செய்ய முன்பக்க வி.ஜி.ஏ கேமரா என எல்லாமும் உள்ளது.
ஹெச்.டி.சி Desire V – 15,499/- ரூபாய்
HTC Desire V 1
ஹெச்.டி.சி நிறுவனத்தின் மற்றுமொரு டூயல்சிம் மொபைல். 4”இன்ச் ஸ்க்ரீன், 512எம்பி ரேம், 1ஜிஹெச் சிங்கிள் கோர் ப்ராசஸர், லேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு 4.0 வெர்ஷன் என எல்லாமும் உள்ளது. பின்பக்க 5 மெகாபிக்சல் கேமரா மட்டும் உண்டு, வீடியோ காலிங் செய்ய முன்பக்க கேமரா இல்லை.
எல்.ஜி.ஆப்டிமஸ் L5 Dual E615 – 12,699/- ரூபாய்
LG Optimus L5 Dual E615 1
தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனத்தின் லேட்டஸ்ட் டூயல்சிம் ஆன்ட்ராய்டு மொபைல்.  4.0 ஐஸ்க்ரீன் சாண்ட்விச் இயங்குதளம், 4”இன்ச் டச் ஸ்க்ரீன், 800 மெகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் வேகம், 512எம்பி ரேம் எல்.இ.டி ப்ளாஷ் உடன் பின்பக்க 5 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. ஆனால் முன்பக்க வீடியோ காலிங் கேமரா மட்டும் மிஸ்ஸிங்.
சோனி எக்ஸ்பீரியா tipo dual – 9,199/- ரூபாய்
Sony Xperia tipo dual 1
ஜப்பானைச் சேர்ந்த பிரபல சோனி நிறுவனத்தின் பட்ஜெட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன். 3.2 இன்ச் டச் ஸ்க்ரீன், 800 மெகாகெர்ட்ஸ் ப்ராசஸர், 512எம்பி ரேம், 3.15 மெகா பிக்சல் கேமரா என எல்லா வசதிகளும் இருந்தாலும் பின்பக்க ப்ளாஷ்லைட் மற்றும் முன்பக்க வீடியோகாலிங் கேமரா இல்லாதது பெரிய மைனஸ்.
Thanks: rightnews



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog