கால்வலிக்க அலைகின்றேன்....
காணும் யாவையும்
காதலல்லாப் பொருளாய்த்
தெரிகிறது கண்களுக்கு....!
காதலென்றால் என்னவென்றேன்
காதலரிடம்.....
அவர்களோ,
SMS-இல் தொடங்கி
MMS-இல் முடிவது
என்றார்கள்.....!
காதலில் காமமா?
காமத்தில் காதலா?
காதலில் காமம் என்றார் சிலர்...
காமத்தில் காதல் என்றார் பலர்....
காதலில் காமமா?
காமத்தில் காதலா?
காதலென்றால் என்னவென்றேன்
காதலரிடம்.....
அவர்களோ,
அதையே
நாங்களும் தேடுகிறோம்
திரையரங்க இருளிலும்
பூங்காவின் இலைமறைவுப் பிரதேசங்களிலும்
என்றனர்....
காமமென்றால் என்னவென்றேன்
காமனிடம்...
அவனோ,
காதல் கொன்று
உடலைத் தின்று
உயிர்ப்பிப்பது என்றான்....
காதலில் காமம் கொன்று
காமத்தில் காதல் தின்று
காதலும் காமமும்
உடல் ரேகைகளினூடே
பயணிக்கிறது யாவரிடத்திலும்.....!
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment