Monday, 31 December 2012

பூ அல்ல பூவை இவள்..

அடிமைப் பெண்ணிலிருந்து 
புதுமைப் பெண்ணாய் மாறியவள் 
பெண்...
சிறகுகள் செய்து
பறக்க கற்றுக்கொண்டவள் 
பெண்..
கேள்விக்குறியை (?)
ஆச்சரியக்குறியாக்கியவள் (!)
பெண்... 

எங்கு அவள் ...???

வானில் பறக்கிறாள் 
வானவில்லை பிடிக்கிறாள்..
செய்மதி செய்கிறாள்
செய்திகள் சொல்கிறாள்...

கப்பல் ஓட்டுகிறாள்
கடலுக்குள் நீந்துகிறாள்..
வைத்தியம் செய்கிறாள்
வள்ளுவன் ஆகிறாள்..

கட்டியம் சொல்கிறாள்
கட்டிடம் கட்டினாள்..
வாதம் செய்கிறாள்...
நீதி காக்கிறாள்...

போர் செய்கிறாள்
பார் ஆழ்கிறாள்...
மாணவர் ஏறிவரும் ஏணி அவள்..
கண்ணி எடுக்கும் கன்னி இவள்..

அரசாங்கம்..அரசியலிலும் 
அவள் பிரவேசம்..
எங்கு இல்லை
இங்கு பெண் வேஷம்..
எங்கும் அவள் தான்...

ஆனால்...

கசங்கிவிடமாட்டள்
பூ அல்ல பூவை இவள்.
காணமல்போகமாட்டாள்
காற்று அல்ல காரிகை இவள்.
எழுத்துப்பிழைகளால் உருவானவள்
இப்போது கவிதை ஆகிவிட்டாள்...

ஆணுக்கு அடிமையாய் கிடந்தவள் 
ஆணை முந்தி விட்டாள்..
ஆண்கள் இன்னமும் குழந்தைபெற 
தயாராக வில்லை...

தமிழ்நிலா

Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog