Sunday, 20 January 2013

நெஞ்சம் மறப்பதில்லை ....!

"நான் இ.பி.கோ.-விற்கு பயப்படவில்லை. ப.பி.கோ.-விற்கு பயப்படுகின்றேன். அதாவது 'பகவான் பிரசிஜர் கோட்'-க்கு பயப்படுகின்றேன்." - கவிஞர்  கண்ணதாசன் தனது புத்தகம் ஒன்றில் எழுதிய வரிகள். எவ்வளவு ஆழமான சிந்தனை, வேடிக்கையான வார்த்தை ஜாலங்களில்.

ப.பி.கோ.-விற்கு பயப்பட்டு விட்டால், பிறகு நாட்டில் இ.பி.கோ., சி.பி.கோ., (சிவில் பிரசிஜர் கோட்), சிஆர். பி.கோ. (கிரிமினல் பிரசிஜர் கோட்) ஆகிய சட்டங்களுக்கு வேலை இல்லை என்பது உண்மைதானே ? 

எல்லாவிதமான உணர்வுகளையும் தனது பாடல்களில் காட்டியவர் கண்ணதாசன். அவரது பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படங்கள் எத்தனையோ? உடலை வருடும் தென்றல் காற்றாய் மனதை தழுவும் அவரது மெல்லிசை பாடல் வரிகளை இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆயிரம் அர்த்தங்கள் அவற்றில் மென்மையாக உறங்கிக் கொண்டிருக்கும்.

"நெஞ்சில் ஒரு ஆலயம்" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மிக அருமையான பாடல் வரிகளை பாருங்கள்,-

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை;
நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை.
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே;
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே."

நமது வாழ்வில் நினைப்பது எல்லாமே நடந்து விடுகின்றதா..? சத்தியமாக கிடையாது. ஏதோ... 

மேலும் வாசிக்க பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கவும்....


என்றும் அன்புடன்,

பி.ஆர்.ஜெ.


  


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog