Tuesday, 13 August 2013

புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை!- ஆலய நிர்வாகம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழமையாக ஒலிக்கப்படும் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு யாரும் தடைவிதிக்கவில்லை என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர்; தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை கிழக்கு ஆலயங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதுடன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினருக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தியும் பொய்யானதே என தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எமது ஆலயத்தில் வழமையாக ஒலிபரப்பப்பட்டு வரும் புதுவை இரத்தினதுரையின் பாடலான “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” என்ற பாடல் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், அதனை தடைசெய்யும் உரிமை யாருக்கும் இல்லை என்பதுடன், அவ்வாறு யாராவது தடைசெய்வார்களானால் சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம்.
எனவே இனிமேல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பிரசுரிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Continue reading →

நவனீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக நியாயமான முறையில் விளக்கமளிப்பேன். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது.
எனினும், நாட்டின் நீதியமைச்சர் என்ற ரீதியில் கடமைகளிலிருந்து விலகிச் செயற்பட மாட்டேன். என்னிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, வழக்கு விசாரணைகள் கால தாமதமாகின்றமை போன்றன தொடர்பில் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடும்.
அவ்வாறான கேள்வி எழுப்பினால் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டுக்காக நியாயமான விளக்கங்களை அளிப்பேன். கட்சியின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனைப் புரிந்து கொள்வார். ஜனாதிபதி பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
எனினும், சில பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.
யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Continue reading →

பேஸ்புக் தளத்திற்கு இணையாக தமிழ்ப் பெண்ணால் உருவாக்கப்பட்ட "நட்பு வளையம்!"



தற்போது சமூக வலைத்தளங்களில் பாரிய புரட்சியை பேஸ்புக் தளம் ஏற்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை காரணமாக இணையத்தளங்களின் உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இது இவ்வாறிருக்கையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்மணியால் முகநூலுக்கு (facebook) இணையாக "நட்புவளையம் " (www.natpuvalayam.com) எனும் ஒரு சமூகவலை இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. முகநூல் பாவனை செய்யும் அனைத்து உறவுகளும், இந்த "நட்புவளையத்தையும்" பாவணை செய்யலாம்.... என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"தமிழன் எங்கிருந்தாலும் பெருமைதான்"
http://natpuvalayam.com/
http://natpuvalayam.com/mobile/
Continue reading →

Monday, 12 August 2013

மக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றுபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவிப்பு

மக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றி வழிகாட்டிக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என ஐ.ம.சு.முன்னணியில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

மருதபுரம் முருகன் ஆலய முன்றலில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக இப்பகுதிக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தவகையில், வீடுகளுக்கு மட்டுமல்லாது மக்களது வாழ்வை மாற்றக் கூடிய திறம்படைத்தவர் அமைச்சர் அவர்கள் என்றும், கடந்த பல வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாது இருந்த நிலையில் இப்பகுதிக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் உழைத்தவர் என்றும் தெரிவித்தார்.

மின்சாரம் மட்டுமல்லாது வீதி போக்குவரத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார உரிமைகளுடன் எமது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதே எமது விருப்பாகும்.

அந்த வகையில் மருதபுரத்தை மருதநகராக மட்டுமல்லாது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அமைச்சர் அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வளங்கொழிக்கின்ற பூமியாக மாற்றியமைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதில் ஈ.பி.டி.பியின் மாகாண சபை வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன் மற்றும் திருமதி ஞானசக்தி சீறிதரன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துரையாற்றும் போது, வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களது கல்வியை மேம்படுத்தும் வகையில் 50 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை நிதியிலிருந்து மாதமொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் வழங்கவும், மருதபுரம் இறங்குதுறையை அமைக்கவும், மருதபுரம் பொது மண்டபத்திற்கென தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மருதபுரம் முருகன் கோவில் கூரையை புனரமைத்து தருவதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உவர்நீரை நன்னீராக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அதனூடாக வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே மின்சாரத்தை தமது பகுதிக்கு கிடைக்க வழிவகை செய்த அமைச்சர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக காரைநகர் மருதபுரத்திற்கான புனரமைக்கப்பட்ட வீதியை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச இணைப்பாளர் வீ.கண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளரும், வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஆகியோர் உடனிருந்தனர்.





















 
Continue reading →

காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா நிறைவுநாள் நிகழ்வுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்குபற்றுதலுடன் நிறைவடைந்தன


  

காரைநகர் விளையாட்டுக் கழகங்களும் தியாகி சோபா அறிவாலயமும் இணைந்து நடாத்திய காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது.

முன்னதாக காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவின் நிறைவுநாள் போட்டிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார். முன்பதாக கல்லூரி வாயிலிலிருந்து கரகாட்டத்துடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அரங்கில் ஆசியுரையை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டின் நிறைவுநாள் போட்டிகளை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

காரைநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்கள் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் நிறைவு நாள் நிழச்சிகள் இன்றையதினம் முழுநாளும் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மேலதிகமாக திருமணமான, திருமணமாகாத ஆண்களுக்கிடையிலும் திருமணமான, திருமணமாகாத பெண்களுக்கிடையிலுமான கயிறுத்தல் போட்டி, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஓட்டப்போட்டி, 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான பின்பக்கம் ஓடும் போட்டி, நடுவர்களாக கடமையாற்றியோருக்கான சங்கீத கதிரை போட்டி போன்ற வித்தியாசமான விளையாட்டுக்களும் பெரும் விறுவிறுப்புடனும் ஆரவாரத்துடனும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

மேற்படி போட்டிகளை மக்களோடு மக்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மைதானத்தின் உள்ளேயே சென்று அருகிலிருந்து அவதானித்தமை மற்றுமோர் விடயமாகும்.

நிகழ்சியின் நிறைவாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்) சிறப்புரையாற்றியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியின் உரையையும் நிகழ்த்தினார்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்), முன்னாள் நீதிபதி ஏகநாதன், பிரதேச கடற்படை கட்டளை அதிகாரி கொமாண்டர் கருணாசேன, சிற்றூர்தி சேவைச் சங்க தலைவர் அரியரட்ணம், தீவக பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசிங்க, காரைநகர் சமூர்த்தி முகாமையாளர் ஐங்கரன், தொழிலதிபர் மனோகரன், யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி யோகராஜா ஆகியோரினால் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மிகச்சிறப்பாக பெருமளவு பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவினை நடாத்துவதற்கு காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈபிடிபியின் காரைநகர் பிரதேச இணைப்பாளருமான வீ.கண்ணன் (தோழர் ரஜனி) முன்னின்று உழைத்து அயராது பாடுபட்டதை காரைநகர் வாழ் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள். கடந்தகால யுத்த அனர்த்தங்களினால் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தெழுச்சி ஊட்டும் வகையில் இவ்விளையாட்டு விழா அமைந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

நிகழ்வுகளின் நிறைவாக பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் கபிலனின் நன்றியுரையினை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தேசியக்கொடி இறக்கப்பட்டதை அடுத்து இவ்வருடத்திற்கான காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது.

























Continue reading →

சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா











சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், கிளித்தட்டு, கூடைப் பந்தாட்டம், சுவட்டு மைதான மெய்வன்மைப் போட்டிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான போட்டிகள் என்பன கடந்த 3ம் 4ம் திகதிகளில் சூரிச் வின்ரர்தூர் Deutweg மைதானத்தில் நடைபெற்றது.
சனி, ஞாயிறு என இரு தினங்கள் நடைபெற்ற நிகழ்வுகளில், பொதுச்சுடர் ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியுடன் சுவிஸ் தேசியக்கொடி, தமிழர் இல்லம் கொடி, விளையாட்டுத் துறைக்கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டில் சுவிஸ் தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் MEISTER பட்டத்தை வென்ற செல்வன் ஏரம்பமூர்த்தி மௌத்திரன் அவர்கள் ஓலிம்பிக் தீபத்தினை எற்றி வைத்ததைத் தொடர்ந்து, வீரர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
தமிழர் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக, தமிழர் இல்லம் கராத்தே மாணவர்களின் சிறப்பு வெளிப்பாட்டு நிகழ்வு 20 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வினை மிகச் சிறுவயதில் கறுப்பு பட்டியில் முதலாவது டான் பெற்ற செல்வன் சப்தேஸ் கௌரிதாசன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
வளர்ந்தோர் உதைபந்தாட்டம், 11வயது, 15வயது உதைபந்தாட்டம், பெண்கள் உதைபந்தாட்டம், கிளித்தட்டு, 5 பேர் கொண்ட கரப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான மெய்வன்மை போட்டிகள் என்பன 3ம் திகதி சனிக்கிழமையும், 09வயது, 13வயது, 17வயது, 21வயது உதைபந்தாட்டம், 4 பேர் கொண்ட கரப்பந்தாட்டம், பார்வையாளர் போட்டிகள் போன்ற 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக நடைபெற்றன.
வளர்ந்தோருக்கான உதைபந்தாட்டத்தில், சுவிஸில் இருந்து தெரிவாகிய கழகங்களுடன் ஜேர்மன், பிரான்ஸ், கொலண்ட், ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த அணிகள் மோதிக்கொண்டன. இம்முறை தமிழர் விளையாட்டு விழாவின் திகதி மாற்றத்தினால் டென்மார்க், நோர்வே, இத்தாலி, ஆகிய நாடுகள் பங்குகொள்ள முடியாமைக்கு தமது வருத்தத்தினை தெரிவித்து இருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வளர்ந்தோர் உதைபந்தாட்டத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2011) இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்ட ஜேர்மன் தமிழர் ஸ்ரார் அணியும், பிரான்ஸ் ஈழவர் அணியும் மோதிக்கொண்டன. இறுதியில் ஜேர்மன் தமிழ்ஸ்ரார் அணி தமிழீழக் கிண்த்தை தமதாக்கி கொண்டது.
5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில், சுவிஸ் தாய்மண் விளையாட்டுக் கழகமும் லண்டன் கைதடி விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இரண்டு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடி பார்வையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டனர். தாய்மண் விளையாட்டுக்கழகம் தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.
பார்வையாளர் போட்டிகளில், தலையணைச் சண்டை மக்களைப் பெரிதும் கவர்ந்து கொண்டது. இதில் சிறியோர், பெரியோர் என்ற வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்றி தங்களின் மகிழ்வினை வெளிப்படுத்திக் கொண்டனர். பரிசளிப்பு நிகழ்வுடன் முதல் நாள் நிகழ்வுகள் இரவு 10.00 மணிக்கு நிறைவுற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.00 மணிவரை நடைபெற்றது. காலநிலை இடையிடையே சீரற்று இருந்தாலும், அதையும் மீறி வீரர்களும், பார்வையாளர்களும் விளையாட்டுகளில் மகிழ்வுடன் ஈடுபட்டனர்.
அஞ்சல் ஓட்டம், குண்டெறிதல், 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், 2000 மீற்றர் ஓட்டம் என்பன பார்வையாளர்களுக்கான போட்டிகளாக நடாத்தப்பட்டன. இதில் 2000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 7வயது சிறுவன் சிவரஞ்சன் ரிஷபன் கலந்து கொண்டு, போட்டிக்கான முழுமையான தூரத்தையும் ஓடி முடித்து பார்வையாளர்களின் உற்சாகமான பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்.
21வயது பிரிவினருக்கான உதைபந்தாட்ட போட்டியில், பிரான்ஸ் தெரிவுஅணி இரண்டாவது தடவையாக கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டது.
மென்பந்து துடுப்பாட்ட வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுடன் தமிழர் விளையாட்டு விழா-2013 நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் இரண்டாவது தடவையாக பிரான்ஸ் யாழ்டன் அணி தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.
வளர்ந்துவரும் இளம் சந்ததியினரிடையே தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கில் ஒழுங்கமைக்கபட்ட இந்நிகழ்வானது, இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர்விளையாட்டு விழா-2013 ஏற்பாட்டுக் குழு
தமிழர் இல்லம் - சுவிஸ்
போட்டி முடிவுகள்
உதைபந்தாட்டம் 9 வயதுப்பிரிவு
1ம் இடம் : இளம் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
3ம் இடம் : ஈழவர் விளையாட்டுக்கழகம் . சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : அபயகரன் பரம்சோதி - இளம் சிறுத்தைகள் வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : சுபேஸ் சிவகுமார் - ஒஸ்கா வி.க
உதைபந்தாட்டம் 11 வயதுப்பிரிவு
1ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : தமிழ் யுத் - சுவிஸ்
3ம் இடம் : சிற்றிபோய்ஸ் - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : ரவிக்குமார் கௌசிகன் - ஒஸ்கா வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : அலெக்ஸ் - தமிழ் யுத்
உதைபந்தாட்டம் 13 வயதுப்பிரிவு
1ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : தமிழ் யுத் - சுவிஸ்
3ம் இடம் : இளம் சிறுத்தைகள் - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : சூரியா தவராச - ஒஸ்கா வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : ஆகாஸ் ஜெயகரன் - தமிழ் யுத்
உதைபந்தாட்டம் 15 வயதுப்பிரிவு
1ம் இடம் : றோயல் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : இளம் தென்றல் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
3ம் இடம் : இளம் தமிழ் விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : யுடினாரடடயாi ரோ றோயல்
சிறந்த பந்துக் காப்பாளர் : ஐஅமழ - இளம்தென்றல் வி.க
உதைபந்தாட்டம் 17 வயதுப்பிரிவு
1ம் இடம் : இளம்சிpறுத்தைகள் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : தாய்மண் விளையாட்டுக் கழகம் - சுவிஸ்
3ம் இடம் : யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : Jeksmirpan Somy - இளம் சிpறுத்தைகள் வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : சிமந்தன் தவராஜா- தாய்மண்
உதைபந்தாட்டம் 21 வயதுப்பிரிவு
1ம் இடம் : பிரான்ஸ் தெரிவு அணி  பிரான்ஸ்
2ம் இடம் : தாய்மண் விளையாட்டுக் கழகம் - சுவிஸ்
3ம் இடம் : கொலண்ட் தெரிவு அணி  நெதர்லாந்து
சிறந்த விளையாட்டு வீரர் : Maxime Anton RPegie - பிரான்ஸ் தெரிவு அணி
சிறந்த பந்துக் காப்பாளர் : Laisson Naguleswarpan - பிரான்ஸ் தெரிவு அணி
உதைபந்தாட்டம் வளர்ந்தோர் பிரிவு
1ம் இடம் : தமிழ் ஸ்ரார் விளையாட்டுக்கழகம்  ஜேர்மனி
2ம் இடம் : ஈழவர் விளையாட்டுக் கழகம் - பிரான்ஸ்
3ம் இடம் : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்  பிரான்ஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : ரிஷிகன் கெங்காதரன் - பிரான்ஸ் தெரிவு அணி
சிறந்த பந்துக் காப்பாளர் : துரைசிங்கம் தினேஸ் - பிரான்ஸ் தெரிவு அணி
சிறந்த இறுதிஆட்ட நாயகன் : எதிர்வீரசிங்கம் திலீபன்
உதைபந்தாட்டம் பெண்கள் பிரிவு
1ம் இடம் : வானவில் விளையாட்டுக்கழகம்  சுவிஸ்
2ம் இடம் : young Star விளையாட்டுக் கழகம் - சுவிஸ்
3ம் இடம் : Blue Flame விளையாட்டுக் கழகம்  சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீராங்கணை: LaraStalder - வானவில் வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : சுபா ஆறுமுகம் - வானவில் வி.க கரப்பந்தாட்டம் 5பேர் கொண்டது
1ம் இடம் : தாய்மண் விளையாட்டுக்கழகம்  சுவிஸ்
2ம் இடம் : கைதடி விளையாட்டுக் கழகம் - லண்டன்
சிறந்த விளையாட்டு வீரர் : Selvaresh - தாய்மண் வி.க
Millar - கைதடி வி.க
கரப்பந்தாட்டம் 4பேர் கொண்டது
1ம் இடம் : தாய்மண் விளையாட்டுக்கழகம்  சுவிஸ்
2ம் இடம் : Zurich  B - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : ரூபன் - தாய்மண் வி.க
கிளித்தட்டு- தாச்சி
1ம் இடம் : அமுதசுரபி லீஸ்ரால்  சுவிஸ்
2ம் இடம் : Super Kings - நெதர்லாந்து
கூடைப்பந்தாட்டம்
1ம் இடம் : SH HEAT
2ம் இடம் : BLUE FLAMES
தலையணைச்சண்டை
1ம் இடம் : திரு. கணேஸ்
2ம் இடம் : திரு.உதயகுமார்
3ம் இடம் : திரு.செல்வா
மென்பந்து துடுப்பாட்டம்
1ம் இடம் : யாழ்டன் விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ்
2ம் இடம் : LUCKY FRIENDS
இறுதி ஆட்ட நாயகன் : காண்டீபன் - யாழ்டன் வி.க
சிறந்த பந்து வீச்சாளர் : JERSI  LUCKY FRIENDS
சிறந்த துடுப்பாட்ட வீரன் : UPUL  LUCKY FRIENDS
தொடரின் சிறந்த விளையாட்டு வீரன் : ANU - யாழ்டன் வி.க
சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் : ஜெயகாந்தன் - யாழ்டன் வி.க




Continue reading →

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது


கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் பிரச்சினைக்கு உள்ளாகியிருந்த பள்ளிவாசல் சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இன்று பௌத்த சாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற 3 மணித்தியால பேச்சுவார்த்தையின் போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சில் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முஸ்லிம் அமைச்சர்கள், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பௌத்த மற்றும் இஸ்லாம் மத தலைவர்களும் பொலிஸாரும் கலந்து கொண்டனர்.
இதன்படி தற்காலிகமாக சுவர்ண சைத்திய வீதியில் அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை நிலையத்தை மூடி ஏற்கனவே பாதை திருத்துவதற்காக உடைக்கப்படவிருந்த பழைய பள்ளிவாசலை மீண்டும் இயங்கவைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் பழைய பள்ளிவாசல் மீண்டும் இயங்கும்வரை தற்காலிக பிராத்தனை நிலையத்தில் தொழுகைகளை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
பழைய பள்ளிவாசல் இருந்த பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகாரச் சபை அபிவிருத்தி நடவடிககைகளை முன்னெடுத்து வருவதால், பள்ளிவாசல் தற்காலிகமாக சுவர்ண சைத்திய வீதியில் உள்ள கட்டடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது.
பழைய பள்ளிவாசல் முன்னைய இடத்தில் அமைக்கப்படும் வரை தற்காலிக பள்ளியில் தொழுகை நடத்த முடிவு செய்திருந்தனர். எனினும் புதிய இடத்தில் இருந்து கடந்த மாதம் மாறுவதாக முஸ்லிம்கள் உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில் தாம் அங்கிருந்து வெளியேற மீண்டும் ஒரு மாதம் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Continue reading →

Sunday, 11 August 2013

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு

 
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சேலை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு இன்று (11) காலை 8 மணியளவில் இடம்பெற்றது.

நல்லூர் ஆலய பெருந்திருவிழா நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக வருடம் தோறும் ஆலயத்திற்கு சம்பிரதாய பூர்வமாக கொடிச் சேலை எடுத்து செல்லப்படும். சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள கொடித்தேர் மடத்தில் எழுந்தருளி இருக்கும் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் புடைசூழ சித்திர தேரில் கொடிச் சேலை ஏற்றப்பட்டு நல்லூர் ஆலயத்திற்கு சித்திர தேர் இழுத்து செல்லப்படும்.

நல்லூர் ஆலயத்தை தேர் சென்றடைந்ததும் கொடிச் சேலை இறக்கப்பட்டு செங்குந்தர் மரபில் வந்தவர்களால் தலையில் சுமந்து சென்று கொடிச் சேலை ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்படும்.
Continue reading →

இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு

வானில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வான எரிகல் பொழியும் நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரபஞ்சத்தில் கோள்கள், துணை கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், சில நேரங்களில் வால் நட்சத்திரங்கள் அருகில் வரும் போது அதன் வால் பகுதியில் உள்ள கற்கள் புவியின் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு பூமியில் விழுவது வழக்கம்.

அதாவது, 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றிவரும் "ஸ்விப்ட் டட்டில்" என்ற வால் நட்சத்திரத்தின் பாதைக்கு நெருக்கமாக இன்று பூமி கடந்து செல்லவுள்ளது. இதனால் அதன் துகள்கள் பூமியின் மீது தொடர்ந்து விழுந்து வருகிறது.

அப்படி விழக்கூடிய கற்களும் பூமியிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவிலேயே எரிந்துவிடுவதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு வானத்தின் வடக்கு பகுதியில், நள்ளிரவிற்கு பின்பு வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Continue reading →

23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன


இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.
யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சியை சென்றடைந்தன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன.
கிளிநொச்சிக்கான புகையிரத நிலையம் அமைக்கும் பணியும் பூர்த்தியாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Continue reading →

கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்




கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதிகளுக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொல்லுகள், போத்தல்கள் கொண்டு தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும், இதனால் பலர் காயமடைந்துள்ளதோடு வீடுகள் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த பதற்ற நிலை தொடருமானால் இன்றும் 12 மணிநேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிராண்ட்பாஸில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக இலங்கையின் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு அந்தப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்று காலை நீக்கப்பட்டது.
எனினும் இன்று பகலும் அங்கு பதற்ற நிலை தோன்றியதை அடுத்தே அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Continue reading →

கிரான்ட்பாஸ் மசூதி மீது தாக்குதல்: இரு பொலிஸார் உட்பட 8 பேர் காயம்




கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மசூதி மீது சுமார் 100 பேர் வரையிலான பௌத்த அடிப்படைவாத குண்டர்களால் நேற்றுமாலை தாக்குதல் நடத்தப்பட்டது.
கிரான்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள மாடிக்கட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மசூதி மீது, தொழுகை முடிந்த பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தின் போது, அருகிலுள்ள வீடுகள் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் மசூதிக்குப் பாதுகாப்பு வழங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அப்பிரதேசத்தில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் நேற்றிரவு தொடக்கம் இன்று காலை 7 மணிவரையும் கிரான்ட்பாஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், அமைச்சர் மேர்வின் சில்வா, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.


Continue reading →

வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் கொலை



வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டனில் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படிப்பை தொடர்வதற்காக 32 வயதுடைய குணராசா மயூரதி என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ம் திகதி கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார்.
தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்தார்.
Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog