Sunday, 12 May 2013

ஈழத்தமிழர்கள் 30 வருட கொடும்போரின் பின்னர் உண்மையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா?

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற போரின்போது தமிழ் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகராக போராட்டகளத்தில் பங்கெடுத்தனர். இதன் மூலம் தமிழ் மக்களிடையே ஒரு ஆயுத முனைச்  சமூகமயப்படுத்தல் இடம்பெற்றது என்பதே உண்மை.

அச்சமூகமயப்படுத்தலில் பெண் அடிமைத்தனம் சாதியம்   போன்றன ஒழிக்கப்பட்டதுடன் ஒட்டுமொத்த தமிழ்சமூகமும்  தமது கலாச்சாரம் சார்ந்த விழுமியங்களை அதன் பழமையான பண்புகளை தொடர்ந்து பேணுவதற்கு தயங்கியதில்லை என்றே அனைவராலும் கருதப்பட்டது. இவ்வாறு பேணப்பட்டது  மக்களுக்கு தமது கலாச்சாரத்தின் மீது இருந்த மதிப்பு மரியாதையிலா? என்று வினா தொடுத்தால் அவ்வினாவிற்கு தற்போது இல்லை என்றே பதிலளித்தல் பொருத்தமானதாக இருக்கும்.

ஏனெனில் விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய சூழலில் தமிழ் மக்கள்  தமது விழுமியங்களையும் கலாச்சார பண்புகளையும் தொடர்ந்து அந்நிலையிலேயே பேணாமையில் இருந்தே இம்முடிவை நாம் சுலபமாக பெறலாம்.

 அன்று விடுதலைப்புலிகளால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத முனை நிர்வாகம்; தான் நிர்வகித்த மக்கள் கூட்டத்திற்கு பொழுதுபோக்கு வசதிகள் பலவற்றை சென்றடையவிடாமல்   திட்டமிட்டு தடுத்தமை உலகறிந்த உண்மை. 

இதன் காரணமாக தமிழ்மக்களால் காலச்சுழற்சிக்கேற்ற கலாச்சார மாற்றங்களை படிப்படியாக   உள்வாங்கி; தங்களை அதற்கேற்ப இயைபாக்கம் செய்யமுடியாமல் போயிற்று. அதாவது கூர்படையாத கலாச்சாரத்தை கொண்ட சமூகமாக  தமிழ்சமூகம் மாறியது.

இதன் விளைவை நாம் பாரப்போமானால்; போரின் பின்னரான காலகட்டத்தில் குறுகிய காலத்தில் கிடைத்த அதீத பொழுதுபோக்கு அம்சங்கள்  மக்கள்மீது பாரிய கலாச்சார அழுத்தத்தை வழங்கி தமிழ்ச்சமூகத்திடையே கலாச்சார பிறழ்வுகளை தோற்றுவித்தது. அதாவது தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்ட கலாச்சார அழுத்தத்தின் விளைவாக இன்று ஈழத்தமிழரின் கலாச்சாரம் விகாரமடையும் நிலையை அடைந்திருக்கிறது என்பதே உண்மை.

இதில் விசித்திரம் என்னவென்றால்,  தனிநாட்டுக்கான போராட்டம் என்ற பெயரில் தமிழரின் அதிகாரவர்க்கம் தனது சாமானிய மக்கள்மீது  நீண்ட நெடுங்காலமாக மேற்கொண்ட சுரண்டல்களினாலும் அடக்குமுறைகளினாலும்   தற்போது வெளித்தெரிய ஆரம்பித்திருக்கும் சமூக அனர்த்தங்களுக்கு தாம் பொறுப்பேற்று அவற்றை சரிசெய்ய முனையாமல் இச்சமூக அனர்த்தங்களை சிங்களவர்கள் திட்டமிட்டு தமிழர்கள் மீது திணிப்பதாகவும் இது ஒரு இனஅழிப்பு பொறிமுறையென்றும் ஓலமிடுவதே.

தமது இருப்புக்காகவும் அதிகார போதைக்காகவும் மக்கள் மீது திணிக்கப்பட்ட "துரோகி" பட்டம்சூட்டி நடுவீதியில் நெற்றியில் சுட்டு (பொட்டுவைத்து) கொல்லும் கொலைக்கலாச்சாரம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் நிம்மதியாக பீனிக்ஸ் பறவைகளைபோல  தமது வாழ்வை சாம்பல் மேட்டிலிருந்து மீளக்கட்டமைக்க முனைவது இவர்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை போலும்.

"மாற்றங்களை உள்வாங்காத எதுவும் கூர்ப்படைவதும் இல்லை. தக்கண பிழைத்து நீடித்து நிலைத்திருப்பதும் இல்லை" என்பதே டார்வின் நமக்கு கற்றுத்தந்த கூர்ப்புக் கொள்கை. இது ஈழத்தமிழரின் அரசியல் பயணத்துக்கும் பொருந்தும்.

வவுனியாவில் இடம்பெற்ற இசைநிகழ்வொன்றில் தமிழ் இளைஞர் யுவதிகள் மெய்மறந்து ஆடிப்பாடும் வீடியோ காட்சி.



Related Article:
Sri Lanka


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog